பொருளாதாரச் சரிவிலிருந்து இலங்கையை மீட்க சர்வதேச நாணய நிதியம் மட்டுமே உதவி செய்ய முடியும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், ஒரு நாடு திவாலாகும் போது சர்வதேச நாணய நிதியத்திடம் மட்டுமே செல்லமுடியும் என்று குறிப்பிட்டார். மேலும் சரிந்த பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு கிரீஸ் 13 வருடங்கள் எடுத்ததை உதாரணமாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்காவிட்டால், கடந்த ஆண்டு எரிபொருள் கிடைக்காத நிலை மற்றும் 12 மணி நேர மின்வெட்டு போன்ற நிலைக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்று விக்கிரமசிங்க கூறினார்.